March 03 - World Wildlife day
நினைவிருக்கிறதா என்னை?
முதல் மூச்சு மட்டும் தான் தாயிடம் இருந்து - மற்ற
ஒவ்வொரு மூச்சும் என்னிடம் இருந்து தான்.
நான் யாரென தெரிகிறதா?
ஆம். நான் தான். வரலாறு பிறக்கும் முன் பிறந்த மரம்.
நினைவிருக்கிறதா என்னை?
தென்னை கொடுத்து வளர்த்தேனே உன்னை ...
நீ ஏன் மறந்தாய்
என்னை?
வாழையடி வாழையாக வளர்த்தேனே உன்னை ...
நினைவிருக்கிறதா என்னை?
மா, பலா, வாழை என சுவைத்தேனே உன் நாவில் ...
ஏன் என்னை வெட்டினாய் இந்நாளில் ?
உன் வீட்டின் முன்னும் பின்னும் அழகாய் சிரித்தேனே!
அதனால் தான்...
தொட்டியை மட்டும் தந்தாயோ
எனக்கு?
என் காட்டில் இருந்தவர்களை கூட ஏனடா துரத்தினாய்
?
நினைத்து பார்.
நானே நீ உண்ணும் உணவு.
உடுத்தும் உடை,
நானே உன் இடையில் கச்சை.
உன் கால் மிதியும் தலை எண்ணெய்யும் நானே.
உன் தொட்டில், உன் பாடை - என
அகரம் முதல் னகரம் வரை நானே.
நினைத்து பார்.
நினைவில் கொள்ள மறக்காதே.
எச்சரிக்கை!
நீ இல்லாமல் - நங்கள்
வாழ திறன் கொண்டவர்கள்.
உன்னால் மூச்சுக்கூட விட முடியாது - நான் இல்லாமல்.
நினைவில் கொள்! எச்சரிக்கை!
உன் பகட்டு வேலையை சற்று நிறுத்து - இல்லையேல்,
நாங்கள் வேலை நிறுத்தம் செய்யவோம்.
என்னவாகும் ? எச்சரிக்கை
எங்களை "வாழ விடு" என
கெஞ்சுவதாய் நினைக்க வேண்டாம்.
மாறாக உன்னை வாழ்த்துகிறோம்.
"வாழ்க நலமுடன் "
இதே நிலை நீடித்தால் வசைபாடவும் துணிவோம்.
கவனம்.



Niceee one 🔥🔥💯
ReplyDeleteThank you, madam. Happy that you read Tamil poems.😅
DeleteSuper broo👍🏻
ReplyDeleteThank you bro. 👍😘
DeleteBangam bro✨
ReplyDeleteRex bro... Neengala. .. 😅
Delete