உ. வே. சாமிநாதர்
உ. வே. சாமிநாதர் - பிறப்பு
இன்றழிவோமா நாளை அழிவோமா என்று தமிழ் இலக்கியங்கள் ஓலை சுவடியில் புலம்பிய வேளையில் , 'காலமெல்லாம் வாழும் பெருமையும் சிறப்பும் உள்ள நீங்கள் அழிய மாட்டீர்கள்' என்று சொல்லாமல் சொல்லி அந்த ஓலை சுவடிகளை தெரு தெரு வாய் தேடி அவற்றை கொணர்ந்து அச்சில் ஏற்றிய பெருமைக்கு உரிய உ வே சாமிநாதர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
இவர் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகிலுள்ள உத்தமனாதபுரம் என்ற சிற்றுரில் ௧.௦௨.௧௮௫௫ (19.02.1855)அன்று பிறந்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்ற இவர் தமிழாசிரியராக பணியாற்றினார். தமிழில் சிறந்த புலமை வாய்ந்தவராக திகழ்ந்தார். ஓலைச் சுவடியில் கிடந்த தமிழிலக்கியங்களை தேடி தேடி கண்டுபிடித்தார். அதை ஆய்ந்து ௧௮௯௨-(1892)- யில் சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஆகிய நூல்களை பதிப்பித்தார். பின் ௧௯௦௩ (1903)யில் ஐங்குறுநூறும், ௧௯௦௪ (1904)யில் பதிற்றுப்பத்தும், ௧௯௦௫ (1905) யில் பரிபாடலும் புத்தக வடிவில் வந்தன. கல்லூரியில் பணியாற்றும் போது மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை வெகுவாக ஊட்டினார். அனைவரும் அவரை தமிழ் தாத்தா என்று அன்போடு அழைத்தனர். இவர் ௧௯௪௨ (1942) (28/04/1942)யில் இயற்கை எய்தினார்.
"பொங்கு தமிழர்க் கின்னல் விளைந்தால் சங்காரம் நிசமென சங்கே முழங்கு" - என்ற பாரதிதாசனின் கூற்றை செயல்படுத்திய இத்தமிழ்த் தாத்தாவின் அடி பின்பற்றி சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் தூக்கி நிறுத்துவது நமது கடமையாகும்.
என் சரிதம் - இவரின் (சுய சரிதை)தன் வாழ்க்கை குறிப்பு
#வாழ்க_தமிழ்
#வளர்க_தமிழர்.
துணை செய்த நூல் : விடுதலைப் பாதையில் 1.
நன்றி : தமிழக இளம் பணியாளர் இயக்கம்.(நூல் உரிமை.)
வாசித்ததற்கு நன்றி
தயவுசெய்து பகிருங்கள்.

Excellent!
ReplyDeleteThank you so much sir
Delete