பெய்ரூட் பெருவெடிப்பு

 அம்மோனியம் நைட்ரேட் என்பது என்ன?

ஏன் அது ஆபத்தானது?


பெய்ரூட் பெருவெடிப்பு



லெபனானின் பெய்ரூட்டின் அந்தப் பெரிய கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு தான் குறைந்தபட்சம் நூறு பேரைக் கொன்றதும், கிட்டத்தட்ட நான்காயிரம் பேரைக் காயப்படுத்தியதும்.

லெபனானின் குடியரசுத்தலைவர் திரு. மைக்கேல் அவுன் கூறுவதாவது " 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக போர்ட்டில் பாதுகாப்பற்று இருந்தது".


அம்மோனியம் நைட்ரேட் என்பது தொழில்துறை சார்ந்த வேதிப்பொருள். பொதுவாக இது உரத்தயாரிப்புகள் மற்றும் குவாரி, சுரங்கம் போன்ற இடத்தில் வெடிபொருட்களாக பயன்படுகிறது. இது ஒரு ஆக்சிஜனேற்றியாகும். ஒழுங்கான முறையில் சேமிக்கப் பட்டால் பாதுகாப்பானதாக இருக்கும். ஒருவேளை மாசுபட்டு இருந்தாலோ அல்லது ஒழுங்கற்ற முறையில் சேமிக்கப்பட்டாலோ அல்லது எரிபொருட்களுடன் கலந்தாலோ பேரும் அபாயகரமானதாக மாறிவிடும்.


ஒரு பெரிய அளவு அம்மோனியம் நைட்ரேட் தீவிர வெப்பத்திற்கு வெளிப்படுத்தப்படும் எனில் அதனால் ஒரு பெரிய வெடிப்பை நிகழ்த்த இயலும். குறைந்த அளவு காற்றோட்டம் கொண்ட இடத்தில், பெரிய அளவு எரிபொருளுக்கு அருகில், அதிக அளவு அம்மோனியம் நைட்ரேட்டை வைப்பது பெரும் அளவிலான வெடிப்பை ஏற்படுத்தும். அதிக அளவு அதீத ஆபத்தை உண்டாக்கும்.


"ஒரு அளவில், இந்த வெடிப்பு ஒரு வழக்கமான குண்டிலிருந்து அல்லாமல் அணு குண்டிலிருந்து அளவிடப்படுகிறது", என்கிறார் அல்ஃபோர்டு தொழில்நுட்பங்களின் இயக்குனர் ரொனால்ட் அல்ஃபோர்டு. "ஒருவேளை இது மிகப்பெரிய அணுசக்தி வெடிப்புகள் இல்லாத வெடிப்புகள் மத்தியில் இருக்கக்கூடும்".


செவ்வாய்க்கிழமை நடந்த வெடிப்பின் காட்சியில் 'புகையையும், காளான் போன்ற புகைமூட்டத்தையும்' நிபுணர்கள் பார்த்திருக்கிறார்கள்.


வீடியோ காட்சி, முதலில் வெள்ளை-சாம்பல் நிற புகை வருவதைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து சிவப்பு-பழுப்பு நிற புகையும் வெள்ளை நிற காளான் போன்ற புகைமூட்டத்தையும் காட்டுகிறது. "இந்த வாயுக்கள் அம்மோனியம் நைட்ரேட் தீப்பொறிகளையும், நச்சு வாயுக்களையும், சிவப்பு/பழுப்பு நிற நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் நீரையும் காட்டுகிறது" என்கிறார் தடவியல் பாடசாலை மற்றும் ஃபைண்டர்ஸ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் துறையிலிருந்து ஸ்டீவர்ட் வாக்கர்.


நீங்கள் அம்மோனியம் வெடிப்பை நிகழ்த்தினால், உங்களுக்கு பழுப்பு நிற புகைப்படலம் கிடைக்கக்கூடாது. அது ஆக்சிஜன் சமநிலை சரியாக இல்லை எனக் காட்டுகிறது. எனவே அது வெடிபொருளாகக் கலக்கவில்லை. இந்த பெய்ரூட் வெடிப்பு வேண்டுமென்றே எரியூட்டவில்லை என்பது வரை, இது ஒரு விபத்து போன்று தெரிகிறது.


முற்கால விபத்துகள்


இதுவரை உலகில் நடந்த மிகக்கோரமான அம்மோனியம் நைட்ரேட் விபத்துகளில் சில


* 1921-இல், ஜெர்மனியின் Oppau Plant-இல் நடந்த அம்மோனியம் சல்பேட் மற்றும் நைட்ரேட் உரங்களின் வெடிப்பு 565 பேரைக் கொன்றது.


* 1947-இல், டெக்சாஸ் நகரத்தின் அமெரிக்கக் கப்பல் தளத்தில், 2.300 டன் இரசாயனம் வெடித்தது. இது கடலில் பெரும் அலைக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறைந்தது 567 பேர் இதில் இறந்தனர். மேலும் 5,000 பேர் காயமடைந்துள்ளனர்.



* 2001-இல், பிரான்சின் டொலவுஸின் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பில், 31 பேர் இறந்தனர். 2,500 பேர் காயமடைந்துள்ளனர்.


* 2013-இல், டெக்சாஸின் அம்மோனியம் நைட்ரேட் உரங்களின் கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பில், 14 பேர் இறந்தனர். 300 பேர் காயமடைந்துள்ளனர்.


* 2015-இல், டியான்ஜினின் சீன கப்பல் தளத்தில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் மற்றும் இதர இரசாயனங்களின்  சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 116 பேர் இறந்தனர்.


இந்த வெடிப்பைப் பற்றி லாஸ் ஏஞ்சல்ஸின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் கனிம வேதியியல் துறை பேராசிரியர் ஆண்ட்ரியா செல்லா கூறுவது, "அவ்வளவு பெரிய அளவு இரசாயனத்தை ஆறு ஆண்டுகளாக கவனிக்காமல் வைத்திருந்தது, விபத்து நடக்கக் காத்திருப்பது போன்று இருக்கிறது".


வெடிகுண்டுகளில் அம்மோனியம் நைட்ரேடின் பயன்பாடு

அம்மோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டாக மாற்ற பிற பொருட்களோடு சேர்த்து மாற்றலாம். இது லண்டனில், ஐரிஷ் குடியரசு இராணுவத்தால் 1990-இல் பயன்படுத்தப்பட்டது. 1995-இல் ஓகல்ஹோமா நகரத்தில் ஏற்பட்ட வெடிப்பில் கூட்டாட்சிக் கட்டிடம் அடித்து நொறுங்கியது. இதில் 168 பேர் இறந்தனர். 2002-இல் பேலி இரவுநேர கேளிக்கை விடுதிகளில் ஏற்பட்ட வெடிப்பில் 200-க்கும் அதிகமானோர் இறந்தனர். ஆஃப்கானிஸ்தானில் வீடுகளில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவின் படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட குண்டுகளும் அம்மோனியம் நைட்ரேட்டையே கொண்டுள்ளன.


This article is a translation work by Mr.Ebin Antony. Let us thank him for his wonderful work.

Share this article with your friends to make them aware about this article.

You can read the original article by clicking here.

 English article.

Comments

Post a Comment

Thank you.

Popular Posts